Brahmastra: ‘பிரம்மாஸ்த்ராவின் அப்டேட் மழை..’அடுத்தடுத்த பாகங்களின் ரிலீஸ் தேதியை அறிவித்த அயன் முகர்ஜி!
பிரம்மாஸ்திரா: பாகம் ஒன்று - ஷிவா, கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் வெளியானது. தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியானது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்த திரைப்படத்தில் கதாநாயகனாக ரன்பிர் கபூரும் கதாநாயகியாக அலியா பட்டும் நடித்திருந்தனர்
நல்ல சக்தி மற்றும் கேட்ட சக்திக்கு இடையே நடக்கும் மாயாஜால போர்தான் இப்படத்தின் கதைக்களம்.
பிரம்மாஸ்திராவின் முதல் பாகம், மிகுந்த விமர்சனங்களுக்கு உள்ளானது.
ஆனாலும், இப்படம் உலகம் முழுவதும் 431 கோடிகள் ரூபாய் வரை வசூல் செய்தது.
பிரம்மாஸ்த்ராவின் இயக்குனர் அயன் முகர்ஜி, அப்படத்தின் இரண்டு பாகங்களையும் ஒரே நேரத்தில் படமெடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், 2ஆம் பாகம் டிசம்பர் 2026 ஆம் ஆண்டும் 3ஆம் பாகம் 2027-ல் டிசம்பர் மாதத்திலும் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -