Ramya Pandian: திருமணமான 3 மாதத்தில் குட் நியூஸ் சொன்ன ரம்யா பாண்டியன்! களைகட்டிய கொண்டாட்டம்!

தமிழ் சினிமாவில் பிரபலமான ஹீரோயினாக அறியப்பட்டாலும், முன்னனி இடத்தை பிடிக்க முடியாமலேயே திருமணம் செய்து கொண்டு செட்டி ஆகி விட்டார் ரம்யா பாண்டியன்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
வெள்ளித்திரையுல உச்சம் தொட வில்லை என்றாலும், சின்ன்னத்திரை மூலம் மொத்த ரசிகர்களின் கவனத்தையும் கவர்ந்தார். அதாவது இவர் சின்னத்திரையில் கலந்து கொண்ட குக் வித் கோமாளி மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சி இரண்டுக்கும் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவருக்கும் புகழுக்கும் இடையே இருந்த ஒரு அழகான கெமிஸ்ட்ரி, நிஜமாகவே புகழ் ரம்யாவை காதலிக்கிறாரா? என்கிற சந்தேகத்தை எழுப்பும் விதத்தில் இருந்தது.
அதே போல் பிக்பாஸ் சீசன் 5 மற்றும் பிக்பாஸ் அல்டிமென்ட் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு உறுதியாக கடைசி வரை நிலைத்து நின்று விளையாடினார். ஸ்ட்ராங் போட்டியாளராக இருந்தும் இவருக்கு வெற்றிபெறும் வாய்ப்பு மிஸ் ஆனது.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் வெயிட்டாங்க சம்பாதித்த ரம்யா பாண்டியன், பட வாய்ப்பு இல்லை என்றாலும் சம்பாதித்த பணத்தை கொண்ட, பல ஊர்களுக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டார்.
இறுதியாக தனக்கு ரிஷிகேஷில் தனக்கு யோகா சொல்லி கொடுத்த மாஸ்டரையே திருமணம் செய்து கொண்டு, இப்போது செட்டில் ஆகி விட்டார்.
ரம்யா பாண்டியனுக்கு திருமண ஆகி 3 மாதமே ஆகும் நிலையில், இவருடைய தம்பி பரசுவுக்கு திருமண ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளது.
பரசு திருமணத்திற்கு பந்தக்கால் நட்டு, நலங்கு வைக்கும் புகைப்படத்தை தான் ரம்யா பாண்டியன் பகிர்ந்துள்ளார். இதை தொடர்ந்து, இந்த படம் லைக்குகளை குவித்து வருகிறது.
ஆனால் மணமகள் யார்? இதனால் இவ்வளவு சீக்கிரமாக திருமணம் நடைபெறுகிறது என்கிற மற்ற தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -