சம்பளத்தை அதிகரித்த சாய் பல்லவி...புது படத்திற்கு இத்தனை கோடியா ?
மலையாளத்தில் பிரேமம் படத்தில் அறிமுகமாகிய சாய் பல்லவி ஒட்டுமொத்த தென் இந்திய ரசிகர்களையும் தன் வசப்படுத்தினர்
தொடர்ந்து தமிழ் தெலுங்கு , மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்து வருகிறார்
மற்ற நடிகைகளைப் போல் ஒரு சில படங்களுக்கு பின் கிளாமர் பாதையை தேர்ந்தெடுக்கவில்லை சாய் பல்லவி. கதைக்கும் தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களை மட்டுமே தேர்வு செய்கிறார். தனது எல்லா படங்களுக்கும் சாய் பல்லவி எந்த வித மேக் அப் இல்லாமல் போவதே வழக்கமாக வைத்திருக்கிறார்
சிவகார்த்திகேயன் சாய் பல்லவி நடித்த அமரன் திரைப்படம் கடந்த ஆண்டு பிளாக்பஸ்டர் வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்தில் மேஜர் முகுந்தின் மனைவி இந்து ரெபெக்கா வர்கீஸாக அவர் நடித்தது ரசிகர்களிடம் பாராட்டுக்களைப் பெற்றது.
அமரன் படத்தைத் தொடர்ந்து சாய் பல்லவி தற்போது தெலுங்கில் நாக சைதன்யாவுடன் தண்டேல் மற்றும் இந்தியில் ராமாயணா படத்தில் நடித்து வருகிறார்
அமரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சாய் பல்லவி தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமரன் படத்திற்கு சாய் பல்லவி 3 கோடி வாங்கியதாகவும் தற்போது தண்டேல் படத்திற்கு அவர் 5 கோடி ரூபாய் வரை சம்பளமாக வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன