✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Amaran Teaser : பயோபிக்கில் நடிக்கும் சிவகார்த்திகேயன்..யார் இந்த மேஜர் முகுந்த் வரதராஜன்?

சுபா துரை   |  17 Feb 2024 12:14 PM (IST)
1

கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அமரன்.

Continues below advertisement
2

சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு, நேற்று இந்த படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியானது.

Continues below advertisement
3

இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ அதிகாரியான மேஜர் முகுந்த் வரதராஜனாக நடித்துள்ளார். இதனை அடுத்து மக்கள் மத்தியில் யார் இந்த முகுந்த் வரதராஜன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

4

முகுந்த் வரதராஜன், 1983 ஆம் ஆண்டு கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் பிறந்து சென்னையில் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தார்.

5

இதழியலில் முதுகலை பட்டம் பெற்ற இவர் ராணூவத்தில் சேர்ந்தார். 2006 ஆம் ஆண்டு இவர் ராஜ்புத் ரெஜினிமென்டில் லெப்டினென்டாக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு 2008 ஆம் ஆண்டு கேப்டனாக பதவி உயர்வு பெற்றார்.

6

2012 ஆம் ஆண்டு ஜம்மூவின் ஷோபியான் என்ற பகுதிக்கு மேஜராக அனுப்பப்பட்டார். அதன் பிறகு இந்து வர்கீஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

7

கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் தேதி ஷோபியான் பகுதியில் கட்டிடம் ஒன்று சிறைப்பிடிக்கப்பட்டது. அப்போது நடந்த தாக்குதலில் மூன்று குண்டுகளை நெஞ்சில் தாங்கி வீழ்ந்தார் மேஜர் முகுந்த் வரதராஜன்.

8

இவர் மறைவுக்கு பின் இந்திய அரசின் உயரிய விருதான அசோக சக்ரா விருது இவருக்கு வழங்கப்பட்டது.

9

31 வயதில் நாட்டை காப்பதற்காக தனது இன்னுயிரை தந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறே அமரன் திரைப்படமாக உருவாகியுள்ளது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Amaran Teaser : பயோபிக்கில் நடிக்கும் சிவகார்த்திகேயன்..யார் இந்த மேஜர் முகுந்த் வரதராஜன்?
Continues below advertisement
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.