Jailer FDFS : ஜெயிலர் திரைப்படத்தின் FDFS எப்போது? நேரம் மற்றும் பிற தகவல்கள் இதோ!
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், தமன்னா உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ஜெயிலர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇப்படம் வரும் ஆக்ஸ்ட் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ குறித்த குழப்பம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தமிழ்நாடு அரசு, எந்த ஒரு திரைப்படமும் காலை 9 மணிக்கு முன் திரையிடப்படக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. எனவே ஜெயிலர் திரைப்படத்தின் முதல் காட்சியும் காலை 9 மணிக்கு திரையிடப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
படத்தின் விநியோக உரிமையை ரெட் ஜெயண்ட்ஸ் கைப்பற்றியுள்ளதால் சிறப்பு காட்சி திரையிடப்படும் தகவல் குறித்த அறிவிப்பு, படம் வெளியாகும் சில நாட்களுக்கு முன் வரலாம் என பலர் கூறிவருகின்றனர்.
இதுவரை ஜெயிலரின் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ டைமிங் குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -