Thalaivar 170 : மாஸாக இருக்கும் ரஜினி.. இன்று தொடங்கவிருக்கும் தலைவர் 170 ஷூட்!
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் லால் சலாம். ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள, இப்படம் 2024 ஆம் ஆண்டின் பொங்கலுக்கு வெளியாகும் என்ற அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமாக லைகா வெளியிட்டது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇதனையடுத்து ரஜினி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக படக்குழுவினரின் பட்டியலை வெளியிட்டு வருகிறது லைகா.
முதலில் தயாரிப்பாளரான சுபாஸ்கரனின் புகைப்படம் வெளிவந்தது. அதனை தொடர்ந்து ஜெய் பீம் இயக்குநர் டி.ஜே.ஞானவேலின் புகைப்படம் வந்தது.
அதன் பின், பெரிய லைன் அப்பை கொண்ட இசையமைப்பாளர் அனிருத்தின் புகைப்படம் வெளிவந்தது.
சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது ஆகிய படங்களில் நடித்து துஷாரா, இப்படக்குழுவில் இணைந்துள்ளார்.
அடுத்ததாக ரித்திகா சிங்கும் இப்படத்தில் நடிக்கவுள்ளார் என்ற அறிவிப்பும் வந்ததுள்ளது
மலையாள சினிமா பிரபலம் மஞ்சு வாரியரும் இந்த பட்டியலில் இணைந்துள்ளார்.
பாகுபலி புகழ் ராணா டகுபதி, தலைவர் 170 படத்தில் இணைந்துள்ளார்.
தலைவர் 170 படக்குழுவுடன் இணையும் ஃபஹத் ஃபாசில்
பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனும் ரஜினியுடன் நடிக்கவுள்ளார்.
இறுதியாக ரஜினியின் புகைப்படம் வெளியாகியுள்ளது. தலைவர் 170 படத்தின் ஷூட் இன்று தொடங்கவுள்ளதாக லைகா தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -