Jailer Box Office : பீஸ்டா? ஜெயிலரா? ரஜினி படத்தின் முழு பாக்ஸ் ஆபிஸ் விவரம் இதோ!
நெல்சன் இயக்கத்தில் ரஜினி உள்ளிட்ட பல நட்சத்திரங்களின் நடிப்பில் வெளியான படம் ஜெயிலர்.
இந்த படம் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான நிலையில், நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த படத்திற்கு அனிருத்தின் இசை பக்கபலமாக அமைந்ததாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
உலகெங்கிலும் வெளியான இப்படத்தின் முதல் நாளில் அனைத்து திரையரங்குகளும் ஹவுஸ் ஃபுல் ஆனது.
ஐந்து மொழிகளில் வெளியான ஜெயிலர் தமிழ்நாட்டில் ரூ. 23 கோடியையும் கர்நாடகாவில் ரூ.11 கோடியையும் கேரளாவில் 7 கோடியையும் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ரூ.7 கோடியையும் மற்ற மாநிலங்களில் 3 கோடி ரூபாயையும் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இதனால் 2021 ஆம் ஆண்டில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தின் வசூலை ஜெயிலர் முறியடித்துள்ளதா என்ற கேள்வியால் விவாதம் தொடங்கியுள்ளது. ஜெயிலர் படக்குழு, அதிகாரபூர்வமான தகவலை வெளியிட்டால் மட்டுமே இந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.