Rajinikanth Latha Anniversary : நீங்கள் பார்த்திடாத ரஜினிகாந்த் - லதா ஜோடியின் அரிய புகைப்படங்கள்!

தில்லு முல்லு படப்பிடிப்பின் போது, தனது கல்லூரி பத்திரிக்கைக்காக ரஜினியை பேட்டி எடுக்க சென்றார் லதா.பார்த்த முதல் கணமே, ரஜினி காதலில் விழுந்தார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
அந்த ஒரே பேட்டி,காதலுக்கு பாலமாக அமைந்தது. அதனை தொடர்ந்து இருவரும் அடிக்கடி சந்தித்து கொண்டனர்.

சினிமாவுக்கு முன்னதாக பெங்களூருவில் நடத்துனராக வேலைப்பார்த்த ரஜினிக்கு, லதாவும் பெங்களூருவில் சில காலம் தங்கியிருந்தார் என்று தெரிய வந்த போது, அந்த உறவு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது.
தன்னை கல்யாணம் செய்து கொள்ள ரஜினி கோரிக்கை வைத்த சமயத்தில், பெற்றோரின் சம்மதத்தை லதா கேட்டுக்கொண்டார்.
ரஜினியின் நண்பர் ஒய். ஜி. மகேந்திரன், லதா தங்கையின் கணவர் என்று தெரிய வந்தது. ரஜினி ஒய்.ஜியின் உதவியை நாடினார்.
பின்னர், அனைவரது விருப்பத்துடன் திருப்பதியில் 26 பிப்ரவரி 1981 ஆம் ஆண்டில் இருவருக்கும் திருமணம் நடந்தது.
இந்த ஜோடிக்கு ஐஸ்வர்யா, செளந்தர்யா என இரு பெண் குழந்தைகள் பிறந்தனர்.
இந்நிலையில், 43 ஆம் ஆண்டு திருமண நாளை காணும் இவர்களுக்கு பலர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -