ராகவா லாரன்ஸுடன் கைக்கோர்க்கும் அயலான் இயக்குநர் ரவிக்குமார்!

இயக்குநர் ரவிக்குமார் - ராகவா லாரன்ஸ்
நேற்று இன்று நாளை திரைப்படத்தின் இயக்குநர் ரவிக்குமார், நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து அயலான் என்னும் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள அயலான் திரைப்படம் வரும் ஜனவரி மாதம் பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ளது.
இயக்குநர் ரவிக்குமார் சயின்ஸ் பிக்சன் தொடர்பான கதைக்களங்களில் திரைக்கதை எழுதி இயக்குவதில் திறமையானவர் என்று சொல்லலாம்.
தற்போது அவர் எழுதி இயக்கியுள்ள அயலான் திரைப்படமும் ஏலியன் தொடர்பான கதை அம்சம் கொண்டுள்ளதால் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
அயலான் திரைப்படத்திற்கு பிறகு இயக்குநர் ரவிக்குமார், ராகவா லாரன்ஸை வைத்து புதிய படத்தை இயக்க போவதாக தற்போது தகவல்கள் வெளியாகி வருகிறது.
நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்து வெளியான ஜிகர்தண்டா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.