Aquaman 2 Review : டி.சி யூனிவெர்ஸில் மற்றுமோர் திரைப்படம்..எப்படி இருக்கு அக்வாமேன் - 2 குட்டி விமர்சனம் இதோ..!
ஓராண்டில் படப்பிடிப்பு முடிந்து இரண்டு ஆண்டுகள் ரீ-ஷூட் நடைபெற்ற அக்வாமேன் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியானது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇயற்கையை மாசுபடுத்தி அட்லாண்டிஸ் ராஜ்ஜியத்தையே அழிக்க முயற்சிக்கும் தனது சகோதரர் கோர்டாக்ஸை, மன்னர் அட்லான் மந்திரசக்தியை பயன்படுத்தி பனிப்பாறைகளுக்குள் சிறைபிடித்து இருப்பார்.
இந்நிலையில், முதல் பாகத்தில் தனது தந்தையை கொன்ற அக்வாமேனை பழிவாங்க தேவையான தொழில்நுட்பத்தை தேடிக்கொண்டிருக்கும் பிளாக் மேண்டாவிற்கு, கோர்டாக்ஸின் மந்திர கோல் கிடைக்கிறது. அதன் மூலம், பிளாக் மேண்டீஸை பயன்படுத்தி, கோர்டாக்ஸ் விடுபட்டாரா? அட்லாண்டிஸை அழிக்க நினைத்த அவரது முயற்சியை நாயகன் ஆர்தர் கர்ரி தடுத்தாரா? என்பதே அக்வாமேன் தி லாஸ்ட் கிங்டம் படத்தின் மீதிக்கதை.
படத்தின் பாசிட்டிவ் பிரிவில் பிரமாண்ட கிராபிக்ஸ், அக்வாமேன் - ஓசியன் மாஸ்டர் இடையேயான சகோதரர் உறவு மேம்படுதல் மற்றும் ஆங்கங்கே இடம்பெற்று இருக்கும் நகைச்சுவை காட்சிகள் ஆகியவற்றை கூறலாம்.
திரைக்கதைக்காக எந்த ஒரு உழைப்பையும் பார்க்க முடியவில்லை. எந்த ஒரு முக்கிய கதாபாத்திரமும் சரியாக கையாளப்படவில்லை என்பது மிகப்பெரிய பின்னடைவு. அடடே..! இந்த சண்டை காட்சி நன்றாக இருக்கும்போலவே என எண்ணி முடிப்பதற்குள், சண்டை காட்சி முடிந்துவிடுகிறது.
ஸ்னைடர் தொடங்கி வைத்த டிசி எக்ஸ்டென்டட் யூனிவெர்ஸ் ஆனது, 15வது படமான அக்வாமேன் -2 உடன் மொத்தமாக முடித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் நிச்சயம் தோல்வியடைந்து விடும் என வெளியீட்டிற்கு முன்பே பல விமர்சகர்கள் கூறி இருந்தனர். அது உண்மையாகவும் வாய்ப்பு உள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -