Pushpa 2: ’மனமார்ந்த நன்றி”; புஷ்பா திரைப்பட நடிகர் அல்லு அர்ஜூன் நெகிழ்ச்சி பதிவு!
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரரான அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள புஷ்பா படத்தின் இரண்டாவது பாகம் டிசம்பர்-5 ம் தேதி வெளியாகிறது. அல்லு அர்ஜூன் ஆந்திர முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு, துணை முதலமைச்சர் பவன் கல்யாண் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்தப் படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. புஷ்பா படத்தின் முதல் பாகத்திற்கு தனியே ரசிகர் பட்டாளமே உண்டு.இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா - 2 திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி உலகளவில் வெளியாகிறது. டிச. 4 ஆம் தேதி இரவு 9.30 மணியிலிருந்தே தெலங்கானாவில் புஷ்பா- 2 திரையிடப்படுகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அதோடு மட்டுமல்லாமல் டிசம்பர் 5-ம்தேதி காலை 1 மணி, 4 மணிக்கும் சிறப்புக்காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் விலையாக ரூ.1,120 - 1,240 வரை உயர்த்தவும் அரசு அனுமதி அளித்துள்ளதாக தெரிகிறது . புஷ்பா - 2 திரைப்படம் 3 மணிநேரம் 21 நிமிடங்கள் திரைநேரம் ஆக உள்ளது.
இது தொடர்பாக அல்லு அர்ஜூன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், டிக்கெட் விலையை உயர்த்துவதற்கு அனுமதி அளித்த அரசுக்கு நன்றிகள். இதன் மூலம் தெலுங்கு சினிமாவின் வளர்ச்சி மற்றும் செழிப்பில் அரசின் ஈடுபாடு மற்றும் கடமையுணர்வு வெளிபடுகிறது. மதிப்பிற்குரிய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அவர்களின் சிந்தனை மற்றும் உற்சாகப்படுத்துவது ஆகியவற்றிற்கு நன்றி. மதிப்பிற்குரிய துணை முதலமைச்சர் பவன் கல்யாண் அவர்களுக்கும் தெலுங்கு சினிமா துறையின் வளர்ச்சிக்கு உறுதுணையுடன் இருப்பதற்கும் நன்றி.” என்று குறிப்பிட்டுள்ளார்.
புஷ்பா -2 திரைப்படம் உலகெங்கிலும் 12 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. PVR Inox and Cinepolis சார்ந்த திரையங்குகளில் டிக்கெட் புக்கிங் தொடங்கிய 10 மணி நேரத்திற்குள் சுமார் 55 ஆயிரம் டிக்கெட்கள் விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது
புஷ்பா படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளனர். ஃபகத் ஃபாசில் புஷ்பா-2 படத்தில் வில்லனாக நடித்துள்ளார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ளார். தமிழ்நாட்டில் இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் வெளியிடுகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான புஷ்பா திரைப்படம் பல மொழிகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்காக நடிகர் அல்லு அர்ஜூன் மற்றும் இசையமைப்பாளர் தேவிஶ்ரீ பிரசாத் தேசிய விருது வென்றது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -