PS 2 : 4DX தொழில்நுட்பத்தில் வெளியாகும் பொன்னியின் செல்வன் 2...4DX என்றால் என்ன?
பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் ரிலீஸையொட்டி, அடுத்தடுத்த அப்டேட்களை அப்படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர்.
பாகுபலியின் இரண்டாம் பாகத்திற்கு இருந்த எதிர்ப்பார்பு போல் இப்படத்தின் இரண்டாம் மீது எதிர்ப்பார்ப்பு இல்லையென்பதால், மக்கள் இவர்கள் கொடுக்கும் அப்டேட்களை காத்து வாக்கில் கடந்து போகின்றனர்.
பொன்னியின் செல்வன் என்றழைக்கப்படும் அருண்மொழிவர்மனுக்கும், வானத்திக்கும் உண்டான காதலை காட்சிப்படுத்தும் விதமாக, “வீர ராஜ வீர” பாடல் அமைந்துள்ளது.
தற்போது, பொன்னின் செல்வன் 2’ திரைப்படம் 4DX அதாவது CJ 4D PLEX திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. 4DX திரையரங்குகளில் வெளியாகும் முதல் தென்னிந்திய திரைப்படம் என்ற பெருமை பொன்னியின் செல்வன் 2விற்கு உரியது.
4DX என்றால் என்ன? : இது, CJ 4D PLEX என்ற அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட திரையரங்குகள் ஆகும். இந்த திரையரங்குகளில் திரைப்படத்தில் மூடுபனி, காற்று, நீர் ஆகியவற்றை உள்ளடக்கிய காட்சிகள் திரையில் தோன்றும் போது அதே உணர்வு படம் பார்ப்பவர்களுக்கு ஏற்படும் வகையில் திரையரங்குகள் அமைக்கப்பட்டிருக்கும். சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூவில் உள்ள திரையரங்கில் 4DX வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம், பொன்னியின் செல்வனின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா கோலகலமாக நடந்து முடிந்தது என்பது குறிப்பிடதக்கது.