The Goat Life : பிருத்விராஜ் - அமலா பால் நடிப்பில் வெளியாகவிருக்கும் தி கோட் லைஃப்!
வீரசேகரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி மைனா படத்தின் மூலம் பிரபலமானவர் அமலா பால்
தெய்வத்திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, முப்பொழுதும் உன் கற்பனைகள், தலைவா, நிமிர்ந்து நில், வேலையில்லா பட்டதாரியின் முதல் இரண்டு பாகங்கள், பசங்க 2, அம்மா கணக்கு, ராட்சசன், ஆடை, கடாவர் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், வரும் 28 ஆம் தேதி அமலா பால், பிரித்விராஜ் உடன் இணைந்து நடித்த தி கோட் லைஃப் - ஆடுஜீவிதம் எனும் படம் ஐந்து மொழிகளில் வெளியாகிறது
உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட ஆடுஜீவிதம் நாவலை தழுவி, இப்படத்தை எடுத்துள்ளார் ஈசன் பட இயக்குநர் பிளஸ்ஸி
இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. மரியான் படத்தின் சாயலும் இதில் ஆங்காங்கே தெரிகிறது.
பிரித்விராஜ் நஜீபாகவும் அமலா பால் சைனுவாகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.