Salaar Pre Booking : கண் மூடி திறப்பதற்குள் தீர்ந்து போன டிக்கெட்டுகள்.. சூடுபிடிக்க ஆரம்பித்த சலார்!
நீண்ட நாள் காத்திருப்புக்கு பின், சலார் படம் வரும் டிசம்பர் 22 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இதனையொட்டி, படத்தின் முன்பதிவு நேற்று (15 டிசம்பர் 2023) முதல் தொடங்கியது. தொடங்கிய கணமே, டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ளது. ஒரு சில இடங்களில், இன்னும் முன்பதிவு ஆரம்பிக்கவில்லை.
பிரபாஸின் ரசிகர்கள், முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருவதால் சலார் ஹேஷ்டாக் ட்ரெண்டாகி வருகிறது.
பிரசாந்த் நீல், ராஜமெளலி, பிரபாஸ், பிரித்விராஜ் உள்ளிட்டோர் காலை 7 மணி டிக்கெட்டை கையில் ஏந்தி இருக்கும் புகைப்படமும் ட்ரெண்டாகி வருகிறது.
“3000 கோடி ரூபாய் வசூலிற்கு தயார்”, “அப்போது கே.ஜி.எஃப், இப்போது சலார்.. எப்போதும் ராஜமெளலி துணையாக நிற்கிறார்..” “இந்திய சினிமாவின் சகாப்தங்கள்” போன்ற கமெண்டுகளை இந்த பதிவில் பார்க்க முடிகிறது.
சமீபத்தில் பிரபாஸ் நடித்த படங்கள் பெரிதும் கை கொடுக்காத நிலையில், சலார் மீது பெரும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அத்துடன் இப்படம் ஷாருக்கான் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள டன்கி படத்துடன் நேரடியாக மோதவுள்ளது.