Mambo : வனிதா விஜயகுமார் மகனுடன் மகளை ஜோடி சேர்க்கும் இயக்குநர் பிரபு சாலமன்!
தனுஷ்யா | 25 Jul 2024 03:48 PM (IST)
1
கண்ணோடு காண்பதெல்லாம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் பிரபு சாலமன்
2
அதன் பிறகு கிங், கொக்கி, லீ, லாடம் உள்ளிட்ட படங்களை எடுத்தார். அந்த படங்கள் எதுவும் பெரிதாக ஓடவில்லை.
3
அதன்பிறகு மைனா, கும்கி, கயல், தொடரி, செம்பி போன்ற படங்களை இயக்கி கவனத்தை ஈர்த்தார்.
4
மலை பிரதேசம், பயணம் என இயற்கை சார்ந்த படங்களை எடுக்கும் பாணியை கொண்ட இவர் கும்கி 2 படத்தையும் இயக்கி வருகிறார்
5
தற்போது டி இமானுடன் இணைந்து மாம்போ என்ற படத்தை இயக்கவுள்ளார். நிஜமான சிங்கத்தை வைத்து எடுக்கப்பட்ட முதல் ஆசிய திரைப்படம் என்ற பெருமையை இது பெறுகிறது.
6
வனிதா விஜயகுமாரின் மகனும், பிரபு சாலமனின் மகளும் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்