HBD Prabhu deva : ‘அன்னையின் கருவினில் புரண்டதும் நடனத்தை தொடங்கி விட்டேன்..’ பிரபு தேவாவின் பிறந்தநாள் இன்று!
பிரபு தேவா மைசூரில் 1973ம் ஆண்டு ஏப்ரல் 3ம் தேதி பிறந்தார். இவரது தந்தை சுந்தரும் பிரபல நடனக் கலைஞர் ஆவார். தந்தையை பார்த்து வளர்ந்த இவர், நடனத்தின் மீது ஆர்வம் கொண்டு அதை கற்றுக்கொண்டார்.
புகழ் பெற்ற தர்மராஜ் மற்றும் உடுப்பி லெட்சுமிநாராயணன் ஆகியோரிடம் இருந்து பரதநாட்டியம் மற்றும் பாரம்பரிய நடனங்களை கற்றுக் கொண்டார்.
இயக்குநர் மணிரத்னமின் மௌன ராகம் திரைப்படத்தில் வரும் ‘பனி விழும் இரவு’ பாடலில் புல்லாங்குழல் வாசிக்கும் சிறுவனாக தோன்றிய பிரபு தேவா, பின்னர் அக்னி நட்சத்திரம் படத்தில் ஒரு பாடலுக்கு பின்னணி நடனக் கலைஞராக பணியாற்றினார்.
கமல்ஹாசன் நடித்த ‘வெற்றி விழா’ படத்தில் முதன்மை நடன இயக்குனராக தேவா பணியாற்றினார். அதைதொடர்ந்து பவித்திரன் இயக்கிய ‘இந்து’ என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். பின்னர் நூற்றுக்கும் அதிகமான படங்களில் நடித்து அசத்தினார்.
’வெண்ணிலவே வெண்ணிலவே’என்ற பாடலுக்காக சிறந்த நடன இயக்குநருக்கான தேசிய விருதை பெற்றார். விஜய்யை வைத்து இவர் இயக்கிய போக்கிரி, செம ஹிட்டானது. இவர், ஹிந்தியிலும் சில படங்களை இயக்கியுள்ளர்.
திறைத்துறையில் சிறப்பாக பங்காற்றியதற்காக தமிழக அரசு 2015ல் கலைமாமனி விருதும் 2019ல் மத்திய அரசு பத்மஸ்ரீ விருதையும் வழங்கி இவரை கெளரவித்தது.