Salaar Censor : பிரபாஸின் சலார் படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கிய சென்சார் குழு!
கேஜிஎஃப் முதல் இரண்டு பாகங்களை இயக்கி பிரபலமான பிரசாந்த் நீல், பாகுபலி புகழ் பிரபாஸையும் பிரித்திவிராஜையும் வைத்து சலார் படத்தை இயக்கியுள்ளார்.
படத்தின் டீசர் வெளியான பின்னர் எந்த ஒரு அறிவிப்பும் வராமல் இருந்தது. ஒரு சில காரணங்களால், செப்டம்பர் மாதம் வெளியாக இருந்த படத்தின் ரிலீஸும் தள்ளிப்போனது.
கடந்த வாரத்தில் சலார் படத்தின் டீசர் வெளியானது. கே.ஜி.எப் சாயலை கொண்ட இப்படம், பிரபாஸிற்கு கைக்கொடுக்கும் என நம்பப்படுகிறது.
டிசம்பர் 22 ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் முன்பதிவு வரும் டிசம்பர் 15 ஆம் தேதி தொடங்குகிறது.
தற்போது இப்படத்திற்கு சென்சார் குழு, ஏ சான்றிதழை கொடுத்துள்ளது. அத்துடன் படத்தின் நீளம் 2 மணிநேரம் 55 நிமிடம் என்ற அறிவிப்பும் வந்துள்ளது.
தொடர் விடுமுறை காலத்தில் வெளியாகும் இப்படம் அதிக வசூலை செய்யும் என்ற நம்பிக்கை இருந்த நிலையில் ஏ சான்றிதழ் வழங்கப்பட்டதால், பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் பாதிப்படையும் என்று சொல்லப்படுகிறது.