Kalki 2898 AD : கல்கியாக அவதாரம் எடுத்த பிரபாஸ்..காமிக்கானில் பிரமாண்டமாக நடந்த முதல் பான் இந்திய பட நிகழ்ச்சி!
பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன் மற்றும் தீபிகா படுகோன் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் திரைப்படம்தான் ‘ப்ரஜெக்ட் கே’.
முதல்மறையாக ஒரு இந்திய திரைப்படத்திற்கான அப்டேட் சாண்டியாகோவில் நடைபெற்ற காமிகான் நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது என்றால் அது ப்ராஜெக்ட் கே படத்திற்குதான்.
இப்படத்திற்கு கல்கி 2898 AD என்ற தலைப்பை படக்குழு அறிவித்துள்ளது.
சூப்பர் ஹீரோ ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தில், பிரபாஸின் தோற்றம் மார்வெல் திரையுலகின் அயர்ன் - மேன் கதாபாத்திரத்தை நியாபகப்படுத்துகிறது
இப்படத்தின் கதைக்களம் 2898ம் ஆண்டில் நடைபெறுவது போல் அமைக்கப்பட்டுள்ளது. பெரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்குப் பிறகு நடக்கும் அழிவில் இருந்து உலகை காக்கும் சூப்பர் ஹீரோவாக பிரபாஸ் உள்ளார்
பாகுபலி படத்திற்கு பிறகு தொடர் தோல்விகளை மட்டும் சந்தித்து வரும் பிரபாஸிற்கு கல்கி 2898 AD படம் கை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.