Manimegalai Hussain : ஜாலியாக இருந்த மணிமேகலைக்கு நடந்த சோகம்..ஆறுதல் கூறி வரும் பிரபலங்கள்!
பிரபல இசை தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக வேலை பார்த்து வந்த மணிமேகலைக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி புகழை தேடி தந்தது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமுதல் சீசன் முடிந்த பின் கொரோனா பரவிவந்த போது, வீட்டில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை எடிட் செய்து தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டு வந்தார்.
நாளடைவில் மணிமேகலை ஹுசைன் ஜோடி, ஆயிரக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தனர்.
சூர்ய வம்சம் படத்தில் வருவது போல், கார், பைக், வீடு என அனைத்தையும் ஒன்றின் பின் ஒன்றாக வாங்கினர்.
பண்ணை வீட்டில் கட்டிட வேலை நடந்து கொண்டிருப்பதாக கூறி அதற்கும் ஒரு போஸ்ட் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், தவறுதலாக கீழே விழுந்து காலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் எழுந்து நடக்க முடியவில்லை என்றும் வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார் மணிமேகலை. இவருக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையில், இவருடன் பணிபுரியும் சக நடிகர்களும் கலைஞர்களும் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -