HBD Poonam : மாடலிங் முதல் சினிமா வரை.. பூனம் பஜ்வா கடந்து வந்த பாதை!
பூனம் பஜ்வா 1989 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபடிக்கும்போதே மாடலிங் மீது ஆர்வம் கொண்ட பூனம் பஜ்வா அதை பகுதி நேர வேலையாக செய்து கொண்டு இருந்தார். 2005 ஆண்டில் மிஸ் புனே பட்டத்தை வென்றார் பூனம் பஜ்வா.
அவர் 12 ஆம் வகுப்பு படிக்கும் போதே திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தனது பள்ளி படிப்பை முடித்து பிறகே படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.
2006 ஆம் ஆண்டு பாஜ்வா தெலுங்கு திரைப்படமான ‘மொடாட்டி’ மூலம் அறிமுகமானர் அடுத்த ஆண்டு ‘பிரேமண்டே இந்தே’ படத்தில் பவானியாக சிறப்பாக நடித்திருந்தார். அதன் பிறகு அவர் பல தெலுங்கு திரைப்படங்களில் நடித்தார்.
தமிழில் சேவல் படத்தில் அறிமுகமானார். இவர் தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், தம்பிக்கோட்டை ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
2015 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் இவர் நடித்த ஆம்பள, ரோமியோ ஜூலியட், அரண்மனை 2, முத்தின கத்திரிக்கா போன்ற படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெற்று இவருக்கு பல பாராட்டுகளை பெற்று தந்தது.
இன்று பிறந்தநாள் காணும் பூனம் பஜ்வாக்கு பல்வேறு திறை பிரபலங்கள் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -