Benny Dayal Birthday : தெற்கிலிருந்து வடக்கு வரை கலக்கி வரும் ராக் ஸ்டார் பென்னி தயாளுக்கு இன்று பிறந்தநாள்!
பாடகரும், பாடலாசிரியரும், நடுவருமான பென்னி தயாள் இன்று தனது 39வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஆர்ஆர் டோனெலி எனும் ஈவெண்ட் நிறுவனத்தில் ஒருங்கிணைப்பாளராக இருந்த இவர், கால் சென்டரிலும் பணிபுரிந்துள்ளார். இந்த வேலையை துறந்த பின், இசையில் தன் கவனத்தை செலுத்தி, முன்னணி பாடராக கலக்கி வருகிறார்.
இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, குஜராத்தி, மராத்தி ஆகிய 19க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் 3500க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.
2016 ஆம் ஆண்டில் பென்னி தயாள், தனது காதலி கேத்தரின் தங்கத்தை பெங்களூரில் நடந்த நிகழ்ச்சியிலே திருமணம் செய்து கொண்டார்.
தற்போது சூப்பர் சிங்கர் எனும் பாடல் நிகழ்ச்சியில் நடுவராக உள்ளார்
ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பென்னி தயாளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -