HBD Hariharan : ‘தமிழா தமிழா நாளை நம் நாடே..' ஹரிஹரனின் பிறந்தநாள் இன்று!
ஹரிஹரன் அனந்தராம சுப்ரமணியன் 1955ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், மராத்தி, போஜ்புரி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மொழிகளில், இதுவரை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
1977 ஆம் ஆண்டில் அகில இந்திய பாடகர் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் அவர் பிரபலமானார். அவரது குரலைக் கேட்டு மறைந்த இசையமைப்பாளரான ஜெய்தேவ் காமன் திரைப்படத்தில் பாடும் வாய்ப்பை வழங்கினார்.
ரோஜா படம் மூலம் ஹரிஹரன் தமிழில் அறிமுகமான இவர், அந்த படத்தில் ‘தமிழா தமிழா நாளை நம் நாடே’எனும் பாடலை பாடி கேட்பவர்களை எழுச்சி அடைய செய்தார்.
ரங்கீலா திரைப்படத்தின் ‘ஹய் ராமா’ பாடல் மூலம் பாலிவுட்டில் அறிமுகம் ஆனார். இப்பாடல், இவரின் திரை வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது.
இந்திய இசைக்கான அவரது பங்களிப்புகளுக்காக, ஹரிஹரனுக்கு 2004 இல் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இவர் தேசிய திரைப்பட விருதுகள், பிலிம்பேர் விருதுகள், ஐ.ஐ.ஃப்.ஏ விருதுகள் மற்றும் குளோபல் இந்தியன் மியூசிக் அகாடமி விருதுகள் போன்ற பல்வேறு விருதுகளையும் வென்றுள்ளார்.
ஹரிஹரன் புற்றுநோய் மற்றும் எய்ட்ஸிற்கான நிதி திரட்டுவதற்காக ஏராளமான நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். பிறந்தநாள் காணும் இவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.