Sevvalai Rasu : பருத்திவீரன் திரைப்பட புகழ் நடிகர் செவ்வாழை ராசு காலமானார்
பருத்திவீரன் திரைப்பட புகழ் நடிகர் செவ்வாழை ராசு காலமானார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App‘கிழக்குச் சீமையிலே’படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த செவ்வாழை ராசு, அமீரின் பருத்திவீரன் படத்தில், தன் சினிமா பயணத்தை தொடங்கினார்.
முத்தழகு அப்பாவுடன் இருக்கும் செவ்வாழை ராசு, “பொணந்திண்ணி” என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். சின்ன டக்ளஸிடம் இவர் கொட்டு வாங்கும் காட்சிகள் தியேட்டரில் சில்லறையை சிதறவிட்டது.
மைனா, கந்தசாமி உள்ளிட்ட பல திரைப்படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார்.
உடல் நல குறைவால் மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.
அவரது குடும்பத்தினருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -