Rajamouli Next : இந்திய கமர்சியல் சினிமா நாயகனின் அடுத்த படைப்பு இதுதான்!
பாகுபலி என்ற திரைப்படத்தின் மூலம் உலக சினிமா பார்வையாளர்களை இந்திய சினிமாவின் பக்கம் திருப்பிய எஸ் எஸ் ராஜமௌலியின் அடுத்த திரைப்படத்தின் அப்டேட்டுகள் வெளியாகி வருகின்றன.
இயக்குநர் ராஜமௌலி மாவீரன், நான் ஈ , பாகுபலி, பாகுபலி 2 , ஆர் ஆர் ஆர் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய அனைத்து மொழி படங்களின் ரசிகர்களின் மனதை வென்றார்.
இவரது இயக்கத்தில் வெளியான ஆர் ஆர் ஆர் திரைப்படம் இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்றது.
தற்போது இயக்குநர் எஸ் எஸ் ராஜமௌலி, பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்ட தெலுங்கு சினிமா நடிகர் மகேஷ்பாபுவை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இயக்குநர் ராஜமெளலி இயக்கும் திரைப்படங்கள் பிரம்மாண்ட பொருட் செலவிலும் பிரம்மாண்ட சிஜி டெக்னாலஜியில் உருவாகுவதால் இந்த கூட்டணி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.