Paiyaa 2 : உருவாகும் பையா 2 படம்.. கார்த்திக்கு பதில் நடிக்கும் அந்த கதாநாயகன் இவர்தான்!
ABP NADU | 16 Nov 2023 09:26 AM (IST)
1
2010 ஆம் ஆண்டு வெளியான பையா திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது.
2
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் கார்த்தி மற்றும் தமன்னா நடிப்பில் உருவான பையா திரைப்படம் 100 நாட்கள் திரையில் ஓடி வெள்ளி விழாவை கொண்டாடப்பட்டது.
3
வெள்ளி விழாவை கொண்டாடிய பையா திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகிறது என சொல்லப்படுகிறது.
4
பையா இரண்டாம் பாகத்தில் மறைந்த நடிகர் முரளியின் இரண்டாவது மகன் ஆகாஷ் முரளி பையா திரைப்படத்தின் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.
5
பையா இரண்டாம் பாகத்தை மீண்டும் இயக்குநர் லிங்குசாமியே இயக்குகிறார் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன.
6
பையா முதல் பாகத்தின் இயக்குநரான லிங்குசாமியே அப்படத்தை தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.