Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
PA Ranjith : 'ரஞ்சித் தோழர் இல்லன்னா சினிமா என்ற பேச்சுக்கே இடம் இல்லை' மனம் விட்டு பேசிய அதியன் ஆதிரை!
இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் தயாரிப்பு நிறுவனம் சமூகம் சார்ந்த படக்கதைகளை தேர்வு செய்து தயாரித்து வருகிறது. முதன்முதலாக, மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள் படத்தை தயாரித்தது. இத்திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்றது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇயக்குநர் பா. ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக இருந்த அதியன் ஆதிரையின் முதல் கதையான இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு திரைப்படத்தையும் தயாரித்து நீலம் நிறுவனம்.
முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து தன்னுடைய இரண்டாவது படத்தை இயக்க தயாரிப்பு நிறுவனங்களை தேடி அலைந்த அதியனுக்கு தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் மூலம் மீண்டும் படம் இயக்கும் வாய்ப்பை கொடுத்துள்ளார் பா.ரஞ்சித்.
பேட்டி ஒன்றில் மனம் திறந்த அதியன் ஆதிரை ரஞ்சித் தோழர் இல்லன்னா சினிமா என்ற பேச்சுக்கே இடம் இல்லை, அதுவும் நான் பண்ணி வச்சிருக்க கதையை எந்த நிறுவனமும் தயாரிக்க முன் வந்திருக்காது. என்னுடைய முதல் படம் வெற்றியடைந்தும் இரண்டாவது படத்தின் கதையை பல்வேறு தயாரிப்பு நிறுவனங்கள் கதை சொல்லியும் தயாரிக்க முன் வராததால் கடுமையான மன உளைச்சலில் இருந்தேன். ரஞ்சித் தோழர் என்னை அழைத்து நீலம் தயாரிப்பு நிறுவனத்திலேயே என்னுடைய இரண்டாவது படத்தை இயக்குமாறு அன்பாக ஆணையிட்டார்.”என கூறினார்
வேகவேகமாக தொடங்கிய படத்தின் சூட்டிங் பணிகள் நிறைவடைந்து திரையரங்கில் வெளியாக காத்துக் கொண்டிருக்கிறது. இத்திரைப்படத்திற்கு ‘தண்டகாரண்யம்’ என பெயரிடப்பட்டுள்ளது.
அட்டகத்தி தினேஷ், மெட்ராஸ் கலையரசன், ரித்விகா ,சபீர் ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில் அட்டகத்தி தினேஷ் பிறந்த நாளை முன்னிட்டு தண்டகாரன்யம் படக்குழு போஸ்டரை வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -