Nirosha : சூப்பர் ஸ்டார் ஜோடியாக நடிப்பது என் வாழ்நாள் கனவு..நிரோஷாவின் நெகிழ்ச்சி போஸ்ட்!
லாவண்யா யுவராஜ் | 09 Feb 2024 02:15 PM (IST)
1
80 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை நிரோஷா. நடிகவேள் எம்.ஆர். ராதாவின் கடைக்குட்டியான நிரோஷா 'அக்னி நட்சத்திரம்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
2
நடிப்பதில் இருந்து பிரேக் எடுத்து கொண்ட நிரோஷா, விஜய் டிவியின் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியல் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.
3
அதன் தொடர்ச்சியாக வெள்ளித்திரையில் 'லால் சலாம்' படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.
4
இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக அவருடன் நடித்தது குறித்து இன்ஸ்டாகிராமில் நெகிழ்ச்சியான போஸ்ட் பகிர்ந்துள்ளார்.
5
இந்த இரண்டாவது இன்னிங்ஸ் வாய்ப்பளித்த இயக்குநர் ஐஸ்வர்யாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
6
மேலும் 'லால் சலாம்' படத்தில் நடித்த விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்திற்கும் தன்னுடைய நன்றியை தெரிவித்துள்ளார்.