Leo Posters : இதை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே.. லியோ போஸ்டர்களை ட்ரால் செய்யும் நெட்டிசன்கள்!
விஜய்யுடன் இரண்டாவது முறையாக கைக்கோர்த்து லியோ படத்தை இயக்கியுள்ளார் லோக்கேஷ் கனகராஜ். தனக்கு தானே டஃப் கொடுத்து, ஒவ்வொரு படங்களையும் ஒரு படி மேல் இயக்கி வருகிறார் லோக்கி.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசினிமாட்டிக் யுனிவர்சல் கான்செப்ட்டை அறிமுகப்படுத்தி தமிழ் சினிமாவில் சம்பவம் செய்தார். முன்னதாக லியோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், ஃபர்ஸ்ட் சிங்கிள் ஆகியவை வெளியாகி சினிமா ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.
அதன் பின், நான்கு நாட்களுக்கு தொடர்ந்து ஒவ்வொரு மொழியிலும் போஸ்டர்கள் வெளியாகும் என்ற அறிவிப்பு வந்தது.
அதற்கு ஏற்றவாரு, தெலுங்கு, கன்னடம், தமிழ் ஆகிய மொழிகளில் மூன்று போஸ்டர்கள் இதுவரை வெளியாகியுள்ளது.
இந்த போஸ்டர்களை பார்க்க, கோல்ட் பர்சூட், ஆயுதம் ஆகிய படங்களின் போஸ்டர்கள் போல் உள்ளது என்ற கருத்தை முன் வைத்துள்ளனர் சினிமா ரசிகர்கள்.
ஒரு பக்கம் லியோ படத்தின் போஸ்டர்கள் ட்ரால்களை சந்தித்தாலும் மறு பக்கம், அது விஜய் ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -