HBD SJ Surya : இயக்குநர் டூ நடிகர்.. அனைத்திலும் கலக்கும் எஸ்.ஜே.சூர்யாவிற்கு இன்று பிறந்தநாள்!
தொடக்கத்தில் எஸ்.ஜே சூர்யா சினிமாவில் நடிக்க வேண்டும் என்று மிகப்பெரிய ஆசையோடு சென்னை வந்துள்ளார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசென்னை வந்த அவர் நடிகனாக வேண்டும் என்றால் ஒன்று அவரை நம்பி பணம் முதலீடு செய்ய தயாரிப்பாளர் முன்வரவேண்டும் இல்லையென்றால் தானே தயாரித்து அதில் நடிக்க வேண்டும் என்ற உண்மையை புரிந்து கொண்டு இயக்குநராக அவதாரம் எடுத்தார்.
அதைதொடர்ந்து வாலி,குஷி போன்ற மிகப்பெரிய வெற்றிப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநராக உருவானார் எஸ்.ஜே.சூர்யா.
பின் நீண்ட நாள் கனவான நடிப்பை தொடர வேண்டும் என்ற எண்ணத்தில் 2004ம் ஆண்டு நியூ என்ற படத்தை இயக்கி நடித்து ஒரு நடிகராகவும் வெற்றி பெற்றார்.
இன்று அனைத்து தரப்பு மக்களும் ரசிக்கும் ஒரு இயக்குநராகவும், ஒரு நடிகராகவும் இருந்து வருகிறார் எஸ்.ஜே.சூர்யா.
தற்போது இந்தியன் 2 படத்தில் கமலுக்கு வில்லனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -