Jailer Trailer Review: ‘ஓரளவுக்குத்தான் பேச்சு எல்லாம்..அப்புறம் வீச்சு தான்..’ அதிரடியான ட்ரெய்லர்..அசால்ட் காட்டும் ரஜினி..!
எந்திரன், பேட்ட, அண்ணாத்த படங்களை தொடந்து 4வது முறையாக ரஜினிகாந்தை வைத்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் ‘ஜெயிலர்’ என்ற படத்தை தயாரித்துள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், யோகிபாபு, சிவராஜ் குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப் ,யோகிபாபு, விநாயகம், வசந்த் ரவி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைத்துள்ள ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி ரிலீசாகவுள்ளது.
இந்நிலையில் கோலிவுட் பிரபலங்கள் பெரிதும் எதிர்பார்த்த ஜெயிலர் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள் ரஜினி கம்பேக் கொடுத்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
ட்ரெய்லரில் அமைதியான மற்றும் ஆர்ப்பாட்டமான ரஜினி என இருவகை கேரக்டர்கள் உள்ளதால் தியேட்டர்களில் திரை தீப்பிடிக்கும் என்றெல்லாம் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் ரம்யாகிருஷ்ணன், இந்துஜா, வசந்த் ரவி, விநாயகம், சுனில், ஜாக்கி ஷெராப் உள்ளிட்டவர்களும் காட்டப்பட்டுள்ளனர். ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமன்னா, மோகன்லால், சிவராஜ்குமார் உள்ளிட்டோரின் காட்சிகள் இடம் பெறவில்லை. இதனால் அவர்களின் காட்சிகள் சஸ்பென்ஸாக வைக்கப்பட்டுள்ளதா? என கேள்வியெழுப்பியுள்ளனர்.
இப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு இந்த வார இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டுகிறது.