Nayanthara Vignesh Shivan wedding : நட்சத்திர ஜோடி விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமண வீடியோ தீபாவளிக்கு Netflix-ல் வெளியாகிறது
கோலிவுட்டின் நட்சத்திர ஜோடி விக்னேஷ் சிவன் - நயன்தாரா. நீண்ட நாள் காதல் வாழ்க்கைக்கு பிறகு, இவர்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9 ஆம் நாள் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.
சென்னை மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் ஒன்றில் வெகுவிமரிசையாக இவர்களது திருமணம் நடைபெற்றது. இந்த விழாவில் ஷாரூக்கான், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஜோடியின் திருமண விழாவில் செல்போனில் படமெடுக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் தரப்பில் இருந்து வெளியிடப்பட்ட திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
நயன்தாரா விக்னேஷ் சிவனின் திருமண நிகழ்வு நெட்ஃப்லிக்ஸ் ஓடிடி தளத்தில் ஆவணப்படமாக வெளியாகும் என அறிவிப்பு வெளியானது. அதுகுறித்த ப்ரோமோவும் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.
திருமணம் முடிந்து 2 ஆண்டுகள் ஆகியும் தற்போது வரை இவர்களின் திருமண வீடியோ வெளியாகவில்லை. இந்த தம்பதிக்கு தற்போது உயிர் உலக் என இரட்டை மகன்கள் உள்ளனர்
இந்நிலையில் இந்த படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என நெட்ஃபிக்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நயன்தாரா - BEYOND THE FAIRY TALE' என்ற தலைப்பில் 1.21 மணி நேரம் கால அளவு கொண்ட படமாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது.