Nayanthara Vignesh Became Parents: இரட்டைக் குழந்தைகளுக்கு பெற்றோரான நயன்தாரா - விக்னேஷ் சிவன்!
நடிகை நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் தம்பதியினர் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகியுள்ளனர்.
இது குறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள விக்னேஷ் சிவன், ”நயனும் நானும் பெற்றோர் ஆகிவிட்டோம். இரட்டை ஆண் குழந்தைகளுடன் நாங்கள் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளோம்.
எங்கள் பிரார்த்தனைகள், முன்னோர்களின் ஆசீர்வாதங்கள், நல்ல செயல்கள் எல்லாம் சேர்ந்து இரண்டு ஆசிர்வதிக்கப்பட்ட குழந்தைகளின் வடிவில் எங்களிடம் வந்துடைந்துள்ளது.
இச்சூழலில் நயன் - விக்னேஷ் சிவன் தம்பதிக்கு கோலிவுட் திரைப்பிரபலங்களும், நெட்டிசன்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கோலிவுட்டில் காதல் பறவைகளாக பல ஆண்டுகளாக உலா வந்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி கடந்த ஜூன் 9ஆம் கொண்டாட்டமாக திருமணம் செய்து கொண்டனர்.
கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வரும் நடிகை நயன்தாரா, விரைவில் அட்லியின் ஜவான் படத்தின் மூலம் ஷாருக்கானுடன் பாலிவுட்டில் அறிமுகம் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இறுதியாக ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு இவர்கள் ஹனி மூன் சென்று பகிர்ந்த ஃபோட்டோக்கள் இணையத்தில் வைரலாகி ஆக்கிரமித்தன.
தொடர்ந்து துபாயில் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை இருவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடிய புகைப்படங்களும் இவர்களது ரசிகர்களை உற்சாகப்படுத்தின