Nayan Vikki : குலதெய்வ கோயிலுக்கு சென்ற கோலிவுட் ஜோடி.. திருச்சி விமான நிலையத்தில் கொடுத்த போஸ் வைரல்!
கோலிவுட்டின் பிரபலமான ஜோடிகளாக வலம் வருபவரகள் நயன் - விக்கி. நானும் ரெளடிதான் படத்தில், இருவருக்கும் இடையே மலர்ந்த காதல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு போனது.
கடந்த ஜூன் மாதம் நயன்தாராவிற்கும் விக்னேஷ் சிவனிற்கும் கோலகலமாக திருமணம் நடந்து முடிந்தது. திருமணத்தன்று நயன் உடுத்தி இருந்த ஆடை, செம ட்ரெண்டானது.
சில மாதங்கள் கழித்து, இந்த ஜோடி வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்று எடுத்தனர். பிறந்த ஆண் குழந்தைகளுக்கு, உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வேக் N சிவன் என பெயரிட்டனர்.
இந்த அழகிய ஜோடி, காதலித்த காலத்திலே பல ஊர்களுக்கு டூர் சென்று வருவதை வழக்கமாக வைத்திருந்தனர்.
துபாய், ஐரோப்பா என பொழுபோக்கிற்காக சுற்றுலா செல்லும் இவர்கள், பல கோயில் குளங்களும் அடிக்கடி சென்று வருவர்.
தற்போது, குலதெய்வம் கோவிலுக்கு செல்வதற்காக இன்று திருச்சி விமான நிலையத்திற்கு சென்றுள்ளனர். ஏர்போர்ட் லுக்கில் இருக்கும் இவர்களின் புகைப்படம் வெளியாகியுள்ளது.