Annapoorani Controversy : அன்னபூரணி சர்ச்சைக்கு அறிக்கை மூலம் முற்றுப்புள்ளி வைத்த நயன்தாரா!
நடிகை நயன்தாராவின் 75வது திரைப்படமான 'அன்னபூரணி' திரைப்படம் கடந்த டிசம்பர் மாதம் வெளியானது. இப்படத்தை நிலேஷ் கிருஷ்ணா இயக்கி இருந்தார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசமையல் கலைஞராக ஜெயிக்க ஆசைப்படும் ஒரு பெண்ணின் கனவை மையமாகக் கொண்டு இப்படம் வெளியானது.
அப்படத்தில் பிராமண பெண்ணான நயன்தாரா அசைவ உணவுகளை சமைப்பதும் சாப்பிடுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த சர்ச்சை பூதாகரம் எடுக்க திரையரங்க ரிலீசுக்கு பிறகு ஓடிடி தளத்தில் வெளியான அன்னபூரணி திரைப்படத்தை திடீரென அகற்றியது நெட்ஃபிளிக்ஸ்.
நாளுக்கு நாள் நீடித்து வரும் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக நயன்தாரா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
யாருடைய உணர்வையும் புண்படுத்தும் உள்நோக்கத்தில் எடுக்கப்படவில்லை. அதையும் மீறி உணர்வுகளை காயப்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவித்து கொள்கிறோம் என தெரிவித்துள்ளார் நயன்தாரா.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -