Abhinaya: விஷாலுடன் காதல் சர்ச்சை; 15 வருட காதலருடன் சீக்ரெட்டாக நடந்த அபிநயா நிச்சயதார்த்தம் - வைரலாகும் புகைப்படம்!
சமுத்திரக்கனியின் நாடோடிகள் படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அபிநயா. இந்த படத்தில் சசிகுமாருக்கு தங்கையாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்திய அபிநயா சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருது வென்றார். இந்தப் படத்திற்கு பிறகு ஆயிரத்தில் ஒருவன். ஈசன், ஜீனியஸ், தாக்க தாக்க, பூஜை என்று பல படங்களில் நடித்த நபிநயா கடைசியாக மார்க் ஆண்டனி படத்தில் விஷாலின் மனைவியாக நடித்திருந்தார்.
இந்த படங்களை எல்லாம் தாண்டி மலையாத்தில் ஜோஜூ ஜார்ட் இயக்கி நடித்த பணி என்ற படத்தில் நடித்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார். இந்தப் படத்தில் நடித்த அவருக்கு தேசிய விருது கிடைக்க வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தப் படத்திற்கு பிறகு, அவரை பிரபல நடிகர் விஷாலுடன் ஒப்பிட்டு சில கிசுகிசுக்கள் கசியவே, தனது காதல் பற்றி வெளிப்படையாக பேசியிருந்தார்.
2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அபிநயா தான் 15 ஆண்டுகளாக காதல் உறவில் இருப்பதாக கூறியுள்ளார். அவர் எனது சிறு வயது நண்பர். இருவருமே தெரியாமல் காதல் வாழ்க்கைக்கு வந்துவிட்டோம் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் தான் அபிநயாவிற்கு இப்போது திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.
இது தொடர்பான புகப்படத்தை அபிநயா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், அவரும் 15 வருட காதலரும் மோதிரம் மாற்றிக் கொண்ட புகைப்படத்தை மணி அடிப்பது போன்று செய்து காண்பித்துள்ளார். அதில், அவர் நிச்சயதார்த்தம் என்று கூறியுள்ளார். ஆனால் தன்னுடைய காதலரின் முகத்தை அபிநயா வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை அபிநயாவிற்கு பிறந்ததில் இருந்தே காது கேட்காத மற்றும் பேச முடியாத குறைபாட்டுக்கு ஆளானவர் என்றாலும், அதிக மொழி படங்களில் நடித்தவர் என்கிற சாதனைக்கு உரியவர். கூடிய விரைவில் திருமண வாழ்க்கையில் இணைய உள்ள அபிநயாவுக்கு ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.