Naatu Naatu : ‘கருந்தோளு கும்பலோடு… பட்டிக்காட்டு கூத்தக் காட்டு..’ஆஸ்கரில் மாஸ் காட்டிய நாட்டு நாட்டு!
2022 ஆம் ஆண்டில் வெளியான தெலுங்கு படமான ஆர் ஆர் ஆர், தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி என மற்ற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு ரிலீஸானது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட் , ஷ்ரியா சரண் , சமுத்திரக்கனி, ரே ஸ்டீவன்சன், அலிசன் டூடி மற்றும் ஒலிவியா மோரிஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருத்தனர்.
சீதாராம ராஜு (ராம் சரண்) மற்றும் கொமரம் பீம் (என்.டி.ஆர்) ஆகிய இரு இந்திய சுதந்திர போராளிகளின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட கற்பனை கதையே ஆர் ஆர் ஆர்.
இந்த படத்தில் காதல், போராட்டம், புரட்சி, நட்பு, போன்ற பல சுவாரஸ்யமான அனைத்தும் இதில் இடம்பெற்றுள்ளது.
இப்படத்தில் இருக்கும் ஏழுபாடல்களுள், அனைவரையும் ஆடவைத்த நாட்டு கூத்து பாடல் ஆஸ்கார் விருதை வென்றுள்ளது. இப்பாடல் வரிகளை சந்திரபோஸ் எழுதியுள்ளார், எம்.எம்.கீரவாணி இதற்கு இசையமைத்து ஒலிப்பதிவு செய்து உள்ளார்.
ஜெனிஃபர் மீது காதல் கொள்ளும் பீமை, பார்ட்டிக்கு அழைக்கும் காட்சியில், வெளிநாட்டவர்கள் வித விதமான மேற்கிந்திய நடனங்களை ஆட, அவருக்களுக்கு போட்டியாக ராமும் பீமும் “நாட்டு நாட்டு” பாடலுக்கு ஆட தொடங்குவர்.
இந்த நாட்டு கூத்து பாடலுக்கு பெஸ்ட் ஓரிஜினல் சாங் பிரிவில் ஆஸ்கார் விருது வழங்கப்பட்டு உள்ளது. மகிழ்ச்சியில் தத்தளித்து வரும் படக்குழுவினருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -