HBD Santhosh Narayanan : 2கே கிட்ஸ்களின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பிறந்தநாள் இன்று!

சந்தோஷ் நாராயணன்
தமிழ் சினிமாவின் வித்தியாசமான தனித்துவமான இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.
திருச்சியை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான சந்தோஷ் நாராயணனுக்கு சிறு வயது முதல் இசை மீது மிகுந்த ஆர்வம் இருந்தது.
2012ம் ஆண்டு இயக்குநராக பா. ரஞ்சித் அறிமுகமான அட்டகத்தி படம் மூலம் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் அறிமுகமானார்.
முதல் படத்தியிலேயே கலக்கலான பாடல்களை கொடுத்து ரசிகர்களை கவர்ந்ததுடன் சிறந்த இசையமைப்பாளராக அங்கீகரிக்கப்பட்டார்.
அதன் வெற்றியை தொடர்ந்து சூது கவ்வும், ஜிகர்தண்டா, மெட்ராஸ், 36 வயதினிலே, காலா, கபாலி, சித்தா என ஏராளமான வெற்றி படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
மெலடி முதல் துள்ளல் இசை வரை அனைத்து ஃபீல்களையும் மிக சிறப்பாக இசை மூலம் ரசிகர்களுக்கு கடத்த கூடியவர்.
இன்று 41வது பிறந்தநாளை கொண்டாடும் சந்தோஷ் நாராயணனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.