எழுத்தாலும் இசையாலும் பிணைக்கப்பட்ட இருவரின் பிறந்தநாள் ஒரே தினத்தில்..அதே நாள் அன்று பிறந்த ஆக்ஷன் ராணி!
தமிழ் சினிமாவின் தலைசிறந்த படைப்பாளிகளான மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் மற்றும் கவியரசு கண்ணதாசனின் பிறந்தநாள் இன்று.
எண்ணில் அடங்கா வெற்றி பாடல்களை இவர்கள் இருவரின் கூட்டணி கொடுத்துள்ளது.
எவ்வளவு பெரிய தத்துவங்கள், நற்பண்புகள், உண்மைகள் என அனைத்தையும் தன்னுடைய வார்த்தைகள் மூலம் பிரதிபலிப்பவர் கண்ணதாசன்.
வார்த்தைகளுக்கு அற்புதமான மெட்டுக்கள் மூலம் உயிர் கொடுத்தவர் எம்.எஸ். விஸ்வநாதன்.
எழுத்தாலும் இசையாலும் இருகப் பிணைக்கப்பட்ட இவர்களின் கூட்டணி காலத்தால் அழியாதவை.
இந்த இரு மாபெரும் பொக்கிஷங்கள் ஒரே நாளில் பிறந்தநாளை பகிர்ந்து கொண்டனர்.
ஹீரோக்களுக்கு நிகராக வில்லன்களை பந்தாடிய ஆக்ஷன் குயின் விஜய சாந்தியின் பிறந்தநாளும் இன்று தான்.
பெண் ஐபிஎஸ் அதிகாரியாக அதிரடி காட்டிய ரசிகர்களின் மனதில் நீங்காத ஒரு இடத்தை பிடித்தவர்.
தெலுங்கில் அதிக அளவிலான படங்கள் நடித்திருந்தாலும், தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 187க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
திரைத்துறையில் அதிரடியாக கலக்கிய விஜயசாந்தி தற்போது அரசியலிலும் கலக்கி வருகிறார்