Mrunal Thakur: ‘இப்போ இருக்கிற நிலைமையில இதுதான் ரொம்ப முக்கியம்’ போல்டாக பேசிய மிருணாள் தாக்கூர்!
ஆரம்ப காலகட்டத்தில் மாடலாக தனது வாழ்க்கையை தொடங்கி ஹிந்தி நாடகங்களில் கதாநாயகியாக நடித்து, சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் கால் பதித்தவர் நடிகை மிருணாள் தாக்கூர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇவர் ஹிந்தி, மராத்தி,தெலுங்கு மற்றும் தமிழ் மொழி படங்களில் நடித்து வருகிறார். கடந்தாண்டு வெளியான சீதா ராமம் படத்தின் மூலம் இளைஞர்களின் மனதை கொள்ளைக்கொண்டார்.
சீதா ராமம் படம், இவர் வாழ்க்கையில் முக்கியமான படமாக அமைந்தது. இது வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
சமீபத்தில் அவர் பேசுகையில், “தற்போதைய சூழலில் செக்ஸ் மற்றும் காமத்தை பற்றிய முதிர்ச்சி அடைந்த உரையாடல் முக்கியம். மாணவர்களுக்கு இதனை சொல்லிகொடுக்க வேண்டும்”.
“இதனால், அவர்கள் தவறான தகவல் மற்றும் தவறான பழக்கத்தில் இருந்து வெளிவர முடியும்” என மிருணாள் தாக்கூர் கூறினார்.
பாலியல் உறவை மையப்படுத்திய லஸ்ட் ஸ்டோரிஸ் 2 இணைய தொடரில் தமன்னா உடன் சேர்ந்து மிருணாள் தாக்கூர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -