Movie Releases : ப்ரேமலு முதல் பஸ்தர் வரை..மார்ச் 15 ஆம் தேதி வெளியாகவுள்ள படங்கள்!
பிரேமலு (Premalu) : கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி மலையாளத்தில் வெளியான பிரேமலு படம் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து தமிழில் டப்பிங் செய்யப்பட்டு மார்ச் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅமிகோ காராஜ் (Amigo Garage) : பிரசாந்த் நாகராஜன் இயக்கியத்தில் மாஸ்டர் மகேந்திரன், அதிரா ராஜ் மற்றும் முரளி சந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள அமிகோ காராஜ் மார்ச் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
யாவரும் நல்லவரே (Yavarum Nalavarae) : ராஜேந்திர சக்கரவர்த்தி இயக்கியத்தில் யோகி பாபு, சமுத்திரக்கனி, பிக் பாஸ் ரித்விகா, தேவதர்ஷினி, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்துள்ள யாவரும் நல்லவரே படமும் நாளை வெளியாகவுள்ளது
காடுவெட்டி (Kaaduvetti) : சோலை அறுமுகம் இயக்கத்தில் நடிகர் மற்றும் தயாரிப்பாளரான ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ள காடுவெட்டி படம் நாளை வெளியாகவுள்ளது
பஸ்தர் (Bastar) : சத்தீஸ்கரில் நடந்த நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான பஸ்தர் படத்தை சர்ச்சையை கிளப்பிய தி கேரளா ஸ்டோரி குழுவே இயக்கியுள்ளது. இந்த படம் நாளை (மார்ச் 15) வெளியாகவுள்ளது.
ரசாக்கர் (Razakar) : யாத சத்தியநாராயணா இயக்கத்தில் ஹைதராபாத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமான ரசாக்கர் நாளை வெளியாகவுள்ளது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -