Tamil Movies : பார்த்தேன் ரசித்தேன் படம் முதல் வேலையில்லா பட்டதாரி 2 படம் வரை..இன்று வெளியான தமிழ் படங்கள்!
சரண் இயக்கத்தில் பிரசாந்த் நடித்து வெளிவந்த படம் பார்த்தேன் ரசித்தேன். இப்படத்தில் சிம்ரன் மற்றும் லைலா கதாநாயகிகளாக நடித்து இருந்தனர்.
பார்த்தேன் பார்த்தேன், என் உள்ளே என் உள்ளே, எனக்கென ஏற்கனவே போன்ற பாடல்கள் சிறப்பாக அமைந்தது. இப்படம் வெளியாகி இன்றுடன் 24 வருடங்களை நிறைவு செய்கிறது.
சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளிவந்த படம் வேலையில்லா பட்டதாரி 2 .
இப்படத்தில் பாலிவுட் நடிகை கஜோல் 20 வருடங்களுக்கு பிறகு தமிழ் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் வெளியாகி இன்றுடன் 7 வருடங்களை நிறைவு செய்கிறது.
ராம் இயக்கத்தில் வசந்த் ரவி நடித்து வெளிவந்த படம் தரமணி.
இப்படத்தில் ஆண்ட்ரியா ஜெரெமையா ஹீரோயினாகவும், அஞ்சலி கேமியோ ரோலில் நடித்து இருந்தனர். இப்படம் வெளியாகி இன்றுடன் 7 வருடங்களை நிறைவு செய்கிறது
தளபதி பிரபு இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளிவந்த படம் பொதுவாக எம்மனசு தங்கம்.
இப்படத்தில் சூரி, நிவேதா பெத்துராஜ், பிரதீபன் ஆகியோர் நடித்து இருந்தனர். இப்படம் வெளியாகி இன்றுடன் 7 வருடங்களை நிறைவு செய்கிறது.