Blue Sattai Maran : அஜித்தையும் ரஜினியையும் சீண்டி பார்க்கும் ப்ளூ சட்டை மாறன்; கொந்தளிக்கும் ரசிகர்கள்!
ரஜினி மற்றும் அஜித்குமார் ரசிகர்களின் பொறுமையை சோதித்துப் பார்க்கும் அளவிற்கு ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார் பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appநெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் ஜெயிலர். இப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது.
இதனையடுத்து, நடிகர் ரஜினி “ஒரு அளவுக்கு மேல் நம்மகிட்ட பேச்சே கிடையாது வீச்சு தான்” என பேசிய வசனத்தை, வீச்சு பரோட்டா காமெடியுடன் ஒப்பிட்டு கேலி செய்துள்ளார்.
அத்தோடு, நடிகர் அஜித்குமார் மகிழ்திருமேனி இயக்கும் விடாமுயற்சி எனும் படத்தில் நடிக்கவுள்ளார். நீண்ட நாட்கள் ஆகியும் படப்பிடிப்பு தொடங்காமல் இருந்து வருகிறது.
படப்பிடிப்பை தொடங்காமல் உலகை சுற்றி வரும் அஜித்தை ட்ரால் செய்யும் விதமாக, “ஒருவேளை அந்த பைக் ட்ரிப் வீடியோதான் படத்தோட ஃபூட்டேஜ்-ஆ இருக்குமோ?” என ட்வீட் செய்துள்ளார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அஜித் மற்றும் ரஜினி ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனை வருத்தெடுத்து வருகின்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -