Yaanai Mugathaan Review: ரசிகர்களை சிரிக்க வைத்ததா அலறி ஓட வைத்ததா? யானை முகத்தான் படத்தின் திரை விமர்சனம்!
சென்னையில் ஊரெல்லாம் கடன் வாங்கி ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தும் பொறுப்பற்ற இளைஞர் கணேசன் (ரமேஷ் திலக்). விநாயகர் பக்தரான இவர், தனது அனைத்து பிரச்சனைகளையும் நீயே தீர்த்து வைக்க வேண்டும் என கடவுளிடம் தினமும் வேண்டுகோள் வைக்கிறார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஒரு நாள், விநாயகர் சிலை, புகைப்படம் எதுவும் கணேசனின் கண்களுக்கு தெரியாமல் போகிறது. துடிதுடித்து போன கணேசிற்கு யோகி பாபு வடிவில் நேரில் காட்சி தருகிறார், விநாயகர். அடுத்து என்ன நடந்தது? கணேசன் திருந்தி வாழ்ந்தாரா? கணேசனை காண விநாயகர் நேரில் வந்தது ஏன்?
இவ்வளவு மெதுவாகவா நகர்வது? என ரசிகர்களை கோபம் கொள்ள வைக்கிறது, படத்தின் முதல் பாதி. காமெடி-ஃபேண்டசி படம் என கூறிவிட்டு, சிரிப்பு வருவது போல ஒரு இடத்தில் கூட வசனத்தை வைக்காதது பெரும் குறையாக தோன்றுகிறது.
யோகி பாபுதான் அந்த விநாயகர் என்று தெரிந்த பிறகு கொஞ்சமாவது சுவாரஸ்யம் கூடும் என்று எதிர்பார்த்த ரசிகர்களை மொத்தமாக நாமம் சாத்தியுள்ளனர்.
எந்த படத்தில் துணை கதாப்பாத்திரமாக நடித்தாலும் தனது இயல்பான உடல் மொழியினாலும் அவ்வப்போது கொடுக்கும் காமெடி கவுண்டர் வசனத்தினாலும் ரசிகர்களை ஈர்ப்பவர், ரமேஷ் திலக். அவரிடத்திலேயே இந்த மொத்த படத்தையும் தோளிள் தூக்கி சுமக்கும் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார் இயக்குநர்.
ஊர்வசி, கருணாகரனுக்கு ஸ்க்ரீன் டைமிங் இன்னும் கொஞ்சம் நிறையவே கொடுத்திருக்கலாம். இத்தனை காமெடி நட்சத்திரங்கள் படத்தில் இருந்தும், ஒரு இடத்தில் கூட சிரிக்காமல் கடு கடுவென முகத்தை வைத்து கொண்டுதான் படத்தை பார்க்கின்றனர், ரசிகர்கள்.
மொத்தத்தில், பொறுமை சாலிகளின் பொறுமையையும் ஏக அளவில் சோதிக்கிறது யானை முகத்தான் படத்தின் கதை.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -