J Baby Review: மனதை வருடும் பாசக்கதை..எப்படி இருக்கு ஜே பேபி திரைப்படம்..? குட்டி விமர்சனம் இங்கே!
நீலம் புரோடெக்ஷன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சுரேஷ் மாரி இயக்கத்தில் ஊர்வசி, தினேஷ், மாறன் உள்ளிட்டோர் நடித்த ஜே. பேபி திரைப்படம் மகளிர் தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ளது.உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் குட்டி விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமூன்று மகன்கள் மற்றும் இரண்டு மகள்களுக்கு தாயான நடிகை ஊர்வசி. குடும்ப பிரச்சினை காரணமாக மூத்த மகனும் கடைக்குட்டி மகனும் பேசாமம் இருக்கின்றனர்.
அதன் பிறகு ஒரு கட்டத்தில் ஊர்வசி வீட்டை விட்டு வெளியேறி கொல்கத்தா சென்றுவிடுகிறார். அவரை வீட்டுக்கு கூட்டி வர இரு மகன்களும் சேர்ந்து கொல்கத்தா செல்கின்றனர். அவர்களின் முயற்சி வெற்றி பெற்றதா? என்பதே திரைப்படம்.
முதல் பாதி சற்று மெதுவாக செல்ல இரண்டாம் பாதியில் கவனத்தை ஈர்க்கிறார் ஊர்வசி. படத்திற்கு பின்னணி இசை பலம் சேர்த்துள்ளது.
அம்மா பாசம், அண்ணன் தம்பி சண்டை என குடும்பக் கதை என்பதால் நீண்ட நாட்களுக்குப் பின்னர் வெளியான முழுக்க முழுக்க ஒரு குடும்பக்கதையை மைய்யப்படுத்திய திரைப்படமாக ஜே.பேபி அமைந்துள்ளது.
மொத்தத்தில் ஊர்வசிக்கான காட்சிகள் இன்னும் கொஞ்சம் இருந்திருந்தால் ஜே.பேபி ரசிகர்களின் மனதினை உருக்கி இருக்கக் கூடும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -