Ajith Kumar : தள்ளி போகும் விடாமுயற்சி.. இடையில் வந்த குட் பேட் அக்லி..இது உண்மையா?
இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் திரைப்படம் 'விடாமுயற்சி'.
இப்படத்தின் படப்பிடிப்பு ஒரு சில தவிர்க்க முடியாத காரணத்தால் இந்த மாதம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விடாமுயற்சி படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் இணைய உள்ள திரைப்படம் 'குட் பேட் அக்லி'.
மே மாதத்தின் இடையில் அல்லது ஜூன் மாதத்தில் 'குட் பேட் அக்லி' படத்தின் படப்பிடிப்பில் நடிகர் அஜித் கலந்து கொள்ள உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
'குட் பேட் அக்லி' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவைடைந்த பிறகு மீண்டும் 'விடாமுயற்சி' படப்பிடிப்பில் இணைவார் அஜித் என கூறப்படுகிறது.
ஜூன் மாத இறுதியில் 'விடாமுயற்சி' படப்பிடிப்பு தொடங்கலாம் என கூறப்படுகிறது.
படப்பிடிப்பு தள்ளி போவதால் தல அஜித்தின் 'விடாமுயற்சி' திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த செய்தி குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை.