Thalainagaram 2 review : தலைத்தூக்கியதா தலைநகரம் 2? குட்டி ரிவ்யூ இதோ!
V.Z. துரை இயக்கத்தில் சுந்தர்.சி, பாலக் லால்வானி, தம்பி ராமையா, 'பாகுபலி' பிரபாகர், ஆயிரா, ஜெய்ஸ் ஜோஸ், விஷால் ராஜன், சேரன் ராஜ் என பலரும் நடித்துள்ள படம் ‘தலைநகரம் 2’.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தை எஸ்.எம். பிரபாகரன் தயாரித்துள்ளார். இது சுந்தர்.சி 2006 ஆம் ஆண்டு ஹீரோவாக அறிமுகமான ‘தலைநகரம்’ படத்தின் தொடர்ச்சியாகும். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘தலைநகரம் 2’ படத்தின் விமர்சனத்தைக் காணலாம்.
‘தலைநகரம்’ படத்தில் ரைட் என்னும் கேரக்டரில் மிகப்பெரிய ரவுடியாக வரும் சுந்தர்.சி தன்னுடைய நண்பனின் (போஸ் வெங்கட்) மரணத்திற்கு பிறகு திருந்தி வாழ்வதாக காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். அதன் தொடர்ச்சியாக வெளியாகியுள்ள 2ஆம் பாகத்தில் திருந்தி வாழும் சுந்தர்.சி தம்பி ராமையாவுடன் இணைந்து ரியல் எஸ்டேட் பணிகளை மேற்கொள்கிறார்.
மறுபக்கம் வடசென்னை (ஜெய்ஸ் ஜோஸ்), மத்திய சென்னை (விஷால் ராஜன்), தென் சென்னை (பிரபாகர்) பகுதிகளை ஆட்டிப்படைக்கும் ரவுடிகள் இடையே அதிகாரத்தைக் கைப்பற்றும் போட்டி நிலவுகிறது.
ஒரு கடத்தல் தொடர்பான பிரச்சினையில் ஒரு ரவுடி சுந்தர்.சி-யை சீண்ட, மீண்டும் ‘ரவுடி ரைட்’ ஆக மாறுகிறார். இதன்பின்னர் இவர்கள் 4 பேரின் நிலைமை என்ன ஆனது? .. தலைநகரத்தின் அதிகாரத்தைக் கைப்பற்றியது யார்? என்ற கேள்விகளுக்கு பதில் சொல்கிறது படம்.
படத்தில் நடித்துள்ளவர்களில் சுந்தர்.சி தவிர்த்து அத்தனை பேரும் தங்களுடைய கேரக்டர்களை குறைவில்லாமல் செய்துள்ளனர் என்று சொல்லலாம். ஆனால் யாரும் பெரிதாக கவனம் ஈர்க்கவில்லை. ஆக்ஷன் காட்சிகளில் சுந்தர்.சி மிரட்டுகிறார்.
பக்கா ஆக்ஷன் பேக்கேஜ்ஜாக உருவாகி இருந்தாலும் திரைக்கதையில் சொதப்பல்கள் தெரிகிறது.ஜிப்ரானின் பின்னணி இசை படத்திற்கு உதவியுள்ளது. ஆனாலும் முதல் பாகத்தை விட பெட்டராக இரண்டாம் பாகம் எடுக்கிறேன் என சொதப்புபவர்கள் மத்தியில் ’தலைநகரம் 2’ தப்பியுள்ளது என்றே சொல்லலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -