Singapore Saloon Review : முதல் பாதி சூப்பர்.. இரண்டாம் பாதி சொதப்பல்.. சிங்கப்பூர் சலூன் படத்தின் விமர்சனம் இங்கே!
முடி திருத்தும் தொழிலாளியாக வரும் ஆர்.ஜே.பாலாஜி தற்கொலை செய்ய முயற்சிக்கிறார். தற்கொலைக்கான காரணம் என்ன என்பதை ஃபிளாஷ்பேக் வழியாக விவரிக்கப்படுகிறது. இதிலிருந்து ஆர்.ஜே பாலாஜி மீண்டாரா? இல்லையா? என்பதே அடிப்படை கதை
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇப்படத்தின் அஸ்திவாரம் ஆர்.ஜே.பாலாஜி என்றால், சத்யராஜ் மற்றும் ரோபோ ஷங்கர் ஆகியோர் இதன் தூண்கள். ஹீரோயின் மீனாட்சி சௌத்ரிக்கு இப்படத்தில் பெரிய அளவில் வேலை இல்லை.
சிறப்பு தோற்றத்தில் லோகேஷ் கனகராஜ், ஜீவா ஆகியோரை விட அரவிந்த்சாமி கேரக்டர் நன்றாக உள்ளது.
முதல் பாதியில் அசத்தலான காமெடி காட்சிகள் நிரம்பியுள்ளது. இரண்டாம் பாதி, சம்பந்தமே இல்லாமல் எங்கேயோ போகிறது.
இப்படத்தின் பாடல்களுக்கு டான்ஸ் எல்லாம் கிடையாது. சுகுமாரின் ஒளிப்பதிவு தென்மாவட்டத்தை அழகாக காட்டியது. ராவேத் ரியாஸின் பின்னணி இசை சில இடங்களில் கவனிக்க வைக்கிறது.
சிகை அலங்காரம் செய்பவர்களுக்கு இப்படம் சமர்ப்பணம் என தெரிவிக்கப்பட்டாலும், அவர்களின் வாழ்க்கையை இன்னும் அழுத்தமாக காண்பித்து இருக்கலாம்
image 8
- - - - - - - - - Advertisement - - - - - - - - -