Japan Movie Review : ஒரே ஆளாக படத்தை ஆளும் கார்த்தி..ஜப்பானை நேரில் சென்று பார்க்கலாமா?
ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தி, அனு இம்மானுவேல், சுனில் வர்மா, விஜய் மில்டன், பவா செல்லதுரை, ஜித்தன் ரமேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள ஜப்பான் படம் தீபாவளி பண்டிகையையொட்டி இன்று வெளியாகியுள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசிறுத்தை படத்தில் வரும் ராக்கெட் ராஜா போன்று லோக்கல் திருடனாக வராமல், மாபெரும் கொள்ளையனாக வருகிறார் கார்த்தி. இவர் மட்டும்தான் படத்தின் அஸ்திவாரம், ஆணிவேர், தூண் என சொல்லிக்கொண்டே போகலாம்.
வித்தியாசமான கெட்-அப் போட்டு விட்டு, வேறுபட்ட நடிப்பு என மக்களை ஏமாற்றாமல், வித்தியாசமான வாய்ஸில் பேசி அனைவரையும் கவர்ந்துள்ளார்.
மற்றபடி இப்படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் படத்தின் கதைக்கு தேவைப்பட்ட அளவுக்கு நடித்து இருந்தனர். அதை தவிர யாரும் பெரிதாக கவனத்தை ஈர்க்கவில்லை.
ஆடல், பாடல், காதல், ஆக்ஷன், காமெடி, சோகம் என கமர்ஷியல் படத்திற்கு தேவையான அனைத்து அம்சங்களையும் இது கொண்டிருந்தாலும், படக்கதையுடன் ஒன்றாமலே இருப்பது இதன் மைனஸ்.
தீபாவளி பண்டிகையை தியேட்டரில் படம் பார்த்து கொண்டாடும் பழக்கத்தை கொண்டவர்கள் அனைவரும், லாஜிக் எதிர்பார்க்காமல் ஜப்பானை காணலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -