Infinity Movie Review : சொன்னது ஒன்னு செஞ்சது ஒன்னு...எப்படி இருக்கு நட்டியின் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர்?
சாய் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘இன்ஃபினிட்டி' படத்தில் நட்டி நட்ராஜ், வித்யா பிரதீப், முனீஷ்காந்த், சார்லஸ் வினோத், வினோத் சாகர், ஜீவா ரவி என பலரும் நடித்துள்ளனர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதொடர்ச்சியாக நடக்கும் கொலைகளை கண்டறிய, வழக்கு சிபிஐ அதிகரியான நட்ராஜனிடம் கைமாற்றப்படுகிறது. பல கட்ட விசாரணைக்குப் பின் இந்த தொடர் கொலைக்கான காரணத்தை கண்டறிகிறார். உண்மையான கொலையாளி யார்? எதற்காக இத்தனைக் கொலை நடந்தது? என சுற்றி வளைத்து சொல்ல முயற்சித்திருக்கிறார் ‘இன்ஃபினிட்டி’ இயக்குநர் சாய் கார்த்திக்.
படத்தை ஒன் மேன் ஆர்மியாக தாங்குகிறார் நட்ராஜ். ஆரம்பத்தில் சாஃப்ட் ஆக வந்து வில்லியாக மாறும் வித்யா பிரதீப் இன்னும் மிரட்டியிருக்கலாம். மற்ற கேரக்டர்களுக்கு படத்தில் பெரிய அளவில் வேலையில்லை.
முன்பு வெளியான இப்படத்தின் ட்ரெய்லரால் பெரும் எதிர்ப்பார்ப்பு எழுந்தது. சுவாரஸ்யம் இல்லாத திரைக்கதை, எதிர்ப்பார்ப்பை சுக்கு நூறாக உடைத்துள்ளது. ‘இன்ஃபினிட்டி’ படம் ஏதோ அவசர அவசரமாக தயாரானது போல இருக்கிறது.
ரசிகர்கள் இதுதான் படமா என நினைத்தால் அங்கே வேறு ஒன்று நடக்கிறது. அதுவே ட்விஸ்ட் ஆகவும் அமைந்துள்ளது. கொலைக்கான காரணமும், அதன் பின்னால் இருக்கும் காட்சிகளும் கதைக்கு கொஞ்சம் கூட வலுசேர்க்கவில்லை.
பின்னணி இசை சில இடங்களில் கைக்கொடுத்திருக்கிறது. மொத்தத்தில் ‘இன்ஃபினிட்டி’ படம் ‘இதுக்கு இல்லையா ஒரு எண்டு’ என்பதை போல படம் பார்ப்பவர்களை தோன்ற வைத்துள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -