Rayar Parambarai Review : தறிகெட்டு பயணிக்கும் திரைக்கதை..கிருஷ்ணா நடிப்பில் வெளியான ராயர் பரம்பரையின் குட்டி விமர்சனம் இங்கே!
இப்படத்தில் நடிகர் ஆனந்த் பாபுவின் தங்கை வீட்டிலிருந்து ஓடிப்போய் காதல் திருமணம் செய்து கொண்டதால், தன் ஒரே மகளை பொத்தி பொத்தி வளர்க்கிறார். ஆனால் ஜாதகத்தில் இவர் மகளுக்கு காதல் திருமணம் தான் நடக்கும், என ஜோசியர் கூறுகிறார்.
மற்றொருபுறம் ஹீரோ கிருஷ்ணா காதலிப்பவர்களை சகித்துக் கொள்ளாத சங்கத்தில் சேர்ந்து காதலர்களுக்கு எதிராக ரவுடியிசத்தில் ஈடுபடுகிறார்
இவற்றுக்கு மத்தியில் ஜோசியர் கூறியது பலித்ததா, ஆனந்த் பாபு தன் மகளைப் பாதுகாத்து திருமணம் செய்து வைத்தாரா ஆகியவற்றுக்கான விடையை காமெடி கலந்து கொடுத்துள்ள படமே ‘ராயர் பரம்பரை’.
நடிகர் கிருஷ்ணா. நன்றாக ஆடி, பாடி, காதலித்து, சண்டை போட்டு தமிழ் கமர்ஷியல் சினிமாவின் நாயகனுக்கான அத்தனை தகுதிகளிலும் ஃபர்ஸ்ட் க்ளாஸில் பாஸ் செய்கிறார்.
அறிமுக நாயகி சரண்யா. கதை இவர் கதாபாத்திரத்தை சுற்றி நகர்ந்தாலும் நடிக்க வாய்ப்பிருந்தும் பொம்மை போல் வெறுமனே வந்து செல்கிறார்.
ஒன்லைனை கதையின் தொடக்கத்திலேயே சொல்லிவிட்டு அதற்குள் வர முதல் பாதி முழுவதும் முயன்று எங்கெங்கோ தறிகெட்டு திரைக்கதை பயணிக்கிறது ராயர் பரம்பரை.